Sunday, October 10, 2010

நாகபாம்பு அர்ச்சனை செய்த அதிசயம்




















இந்தியாவில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் என்னும் பகுதியில், திருநாகேஸ்வரம் என்னும் ஊரிற்கு அருகில் உள்ள தெப்பெருமநல்லூர் என்னும் ஊரில் வேதாந்தநாயகி சமேத விஸ்வநாதசுவாமி எழுந்தருளி இருக்கும் ஆலயம் இருக்கின்றது. இவ் ஆலயத்தில் நாகபாம்பு ஒன்று வில்வம் இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 15.01.2010 ம் திகதி காலை 10:30 மணியளவில் கங்கண சூரிய கிரகணம் நிகழ்வதற்கு சிறிது நேரம் முன்பதாக; ஆலய சிவாச்சாரியார் அவர்கள் கருவறைக்கு சென்ற பொழுது, அங்கே மூலவிக்கிரகத்தின் உச்சியில் ஒர் நாகபாம்பு அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் அந்த நாகம் சிவலிங்கத்தில் இருந்து மெதுவாக இறங்கி நேராக அங்கிருந்த வில்வமரத்தின் மேல் ஏறி அந்த வில்வமரத்தில் இருந்து சில வில்வம் இலைகளைப் பறித்து எடுத்து; அவற்றை தனது வாயில் வைத்துக் கொண்டு திரும்பவும் கருவறைக்குள் நுளைந்து சென்று, சிவலிங்கத்தின் உச்சியில் மேல் அமர்ந்து அதனை சிவலிங்கதிற்கு அர்சனை செய்தது. வில்வமரம் இவ் ஆலயத்தின் தலவிருட்சமாகும்.

இவ்வாறு பலமுறை வில்வம் இலைகள் பறிக்கப்பெற்று சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பெற்றது என அறிய முடிகின்றது. இந்நிகழ்வை பல பக்தர்கள் அதிசமாகவும், பக்தியோடும் பார்த்து வணங்கியுள்ளனர். இந் நிகழ்வினைக் கேள்வியுற்ற ஊர் மக்கள் அதனைக் காண திரண்டு வந்துள்ளனர். இந்நிகழ்வின் போது பக்தர்கள் சிலர் நாகபாம்பை பிந்தொடர்ந்த போது நாகம் சீறி அவர்களை விரட்டியுள்ளது. இந் அதிசய நிகழ்வுபற்றிய செய்திகள் பல தமிழ்நாட்டுப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment