Sunday, October 10, 2010

எப்போதும் காய்க்கும் ருத்திராட்ச மரங்க






இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில், ருத்திராட்சம் என்பது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட ருத்திராட்ச காய்களை அணிவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை கிடைப்பதாக தொன்று தொட்டு நம்பப்படுகிறது. முனிவர்களும், ரிஷிகளும், பண்டிதர்களும் ருத்திராட்சம் அணிந்து, இறைவனை நோக்கி தவம் செய்தனர். ஒரு முகம், ஐந்து முகம் என பல வடிவங்களில் ருத்திராட்சங்கள் கிடைக்கின்றன. ருத்திராட்ச காய்கள், ருத்திராட்ச மரங்களில் விளையும் பழங்களில் இருந்து பெறப்படுகின்றன.


பொதுவாக, மலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மரங்கள் வளரும். தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலையின், பல பகுதிகளில் ருத் திராட்ச மரங்கள் காணப்படுகின்றன. ருத்திராட்ச பழங்களை காய வைக்கின்றனர்.


அதில் இருந்து ருத்திராட்ச காய்களை பிரித்தெடுக்கின்றனர். வனப்பகுதிகளில் மரக் குச்சிகளை பொறுக்குவதற்காக ஆதிவாசி இன மக்களுக்கு அனுமதி தரப்படுகிறது. அவர்கள், ருத்திராட்ச பழங்களை பொறுக்கி வந்து, மாலைகளாக தயார் செய்து விற்கின்றனர். ஆண்டு முழுவதும் ருத்திராட்ச மரத்தில் காய்கள் காய்க்கும் என்பது தான் தனிச்சிறப்பு.




No comments:

Post a Comment