Sunday, October 10, 2010

சிவனடியாருக்கு உரியவைகள்

அகத்திலக்கணம்

1. திருநீரும், கண்டிகையும் அணிதல்

2. மாதா, பிதா, குரு, பெரியோர்கள் -இவர்களை வணங்குதல்

3. தேவாரத் திருமுறைகளை அன்புடன் ஓதுதல்

4. காலை, மாலை, இரவ்ய் ஆகிய காலங்களில் ஐந்தெழுத்தை உச்சரித்தல்

5. சிவ பூஜை செய்தல், செய்வதற்கு உதவுதல்

6. சிவ புண்ணியங்களைச் செய்தல், செய்வித்தல்

7. பெரிய புராணம், சிவ

8. சிவாலய வழிபாடு, திருப்பணிகள் முதலியன செய்தல்

9. சிவனடியார்க்கு வேண்டுவன உதவுதல்

10. சிவனடியாரிடத்தில் மட்டுமே உண்ணுதல்

புறத்திலக்கணம்


சிவபெருமானது புகழைக் கேட்குங்கால்,

1 மிடறு விம்முதல்

2 நா தழுதழுத்தல்

3 இதழ் துடித்தல்

4 உடல் குலுங்குதல்

5 மயிர் சிலிர்த்தல்

6 வியர்த்தல்

7 சொல் எழாமை

8 கண்ணீர் அரும்புதல்

9 வாய்விட்டழுதல்

10 மெய் மறத்தல்

பக்தியின் குறிக்கோள் மேற்கூறிய குணங்களை பெறுவதுதான்.



சாந்தம், அமைதி, அன்பு, கருணை, இன்சொல், நற்செய்கை -முதலியன உடையவர்களாக சிவனடியார்கள் விளங்க வேண்டும்

பேராசை, பொய், களவு, வஞ்சம் இவற்றை ஒழித்து விட வேண்டும்.

எது நடந்ததோஅது சரியே என்றும், எது நடக்க் உள்ளதோ அது நன்றாகவே நடக்கும் என்றும் எண்ணி வாழ வேண்டும்.

No comments:

Post a Comment